மத்தவங்க இங்கிலீஷ்ல பேசினா உங்களால புரிஞ்சுக்க முடியுதா?
அவங்களோட இங்கிலீஷ்ல பேசத் தயக்கமா இருக்கா? ஏதாவது தப்பா பேசிடுவோமோன்னு பயமா இருக்கா?
விவேகானந்தா அளித்து வரும் ஓர் எளிய பயிற்சியில் சேர்ந்து இரண்டே மாதங்களில் சரளமாக இங்கிலீஷ் பேசக் கற்றுக் கொள்ளலாம்.
கீழே உள்ள பாக்ஸை க்ளிக் பண்ணுங்க.
ஆண்டுகளின் அனுபவம்
மகிழ்ச்சியடைந்த மாணவர்கள்
புத்தகங்கள் வெளியிடப்பட்டது
நேர்முகப் பயிற்சி மற்றும் தபால்முறைப் பயிற்சியளித்து வந்த விவேகானந்தா நிறுவனம் தற்போது ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் கோர்ஸ் என்றால் எப்படி இருக்கும்? நம்மால் கற்றுக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பு. எனவே ஆன்லைன் வகுப்பின் மாதிரி க்ளாஸை இத்துடன் இணைத்துள்ளோம். க்ளிக் செய்து வகுப்பைப் பாருங்கள். நம்பிக்கை ஏற்பட்டவுடன் வகுப்பில் சேருங்கள்.
அன்றாட உரையாடலில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளைத் தொகுத்து வழங்கி தனித்தனி அட்டவணைகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைக்க எளிய முறையில் பயிற்சியளிக்கப்படுகிறது.
ஆங்கில வாக்கியங்களை பிழையின்றி அமைத்துப் பழகப் பயிற்சியளித்த பிறகு அவ்வாக்கியங்களை எந்தெந்த சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டும் என பயிற்சியளிக்கப்படும்.
ஆங்கில வாக்கியங்களை சூழ்நிலைக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொண்ட பிறகு Speech Generating Technique அடிப்படையில் பேச்சுப் பயிற்சியளிக்கப்படும். இப்பயிற்சியின் இறுதியில் தயக்கமின்றி இங்கிலீஷில் சரளமாகப் பேசத் தொடங்கி விடுவீர்கள்.
தமிழ்மூலம் ஆங்கில மொழியை எளிய முறையில் கற்பிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது விவேகானந்தா இன்ஸ்டிட்யூட்.
நேர்முகப் பயிற்சி, தபால் முறைப் பயிற்சி, ஆன்லைன் பயிற்சி என நடத்தி வந்த நிறுவனம், தபால் முறைப் பயிற்சி தவிர, நேர்முகப் பயிற்சி மற்றும் ஆன்லைன் பயிற்சி மட்டுமே நடத்தி வருகிறது.
இக்கல்வி நிறுவன முதல்வர், V. ராஜகோபாலன் அவர்கள், பிரபலமான ஜெயா, பொதிகை, ராஜ் மற்றும் வசந்த் தொலைக்காட்சிகளில் ஆங்கில நிகழ்ச்சிகளை எளிய முறையில் நடத்தி வந்தது பெரும்பாலான 90 kids களுக்குத் தெரிந்திருக்கும்.
நீங்களும் எங்களது பயிற்சியில் சேர்ந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.